மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியுள்ள, ஹனி ரோஸ், ஏற்கனவே, சில தமிழ் படங்களில் தலை காட்டினார். ஆனாலும், தமிழ் திரையுலகம், அவரை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.கடும் முயற்சிக்கு பின், தற்போது, "காந்தர்வன் உட்பட, ஒரு சில தமிழ் படங்களை கைப்பற்றியுள்ள, ஹனி ரோஸ், ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்."வந்தாரை வாழவைக்கும் தமிழ்ச் சினிமா என்னையும் சினிமாவில் உயர வைக்கும். கதை சொல்ல வரும், இயக்குனர்கள், நீங்கள் சுகன்யா தங்கச்சி மாதிரியே இருக்கீங்க என்கின்றனர். உண்மையில், நான் சுகன்யா தங்கச்சி இல்லை. தமிழ் திரையுலகில் ஸ்டிராங்கா அஸ்திவாரம் போட வேண்டும் என்பது தான், என் நோக்கம். தற்போது நடித்து வரும் படங்களில், என் கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. இந்த படங்கள் வெளிவந்தால், தமிழ் சினிமாவில், ஒரு ரவுண்டு வருவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், ஹனி ரோஸ்.
Monday, April 1, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment