Thursday, April 25, 2013
விரைவில்...கோ கோவா கான்
அமெரிக்காவுக்கு பறக்கிறார் தமன்னா
கோடை காலம் வந்தாலும் வந்தது, நடிகைகள், இந்தியாவை விட்டு, குளிர் பிரதேசங்களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். நடிகைகளுக்கு, அழகு தான், முக்கியமான விஷயம். இங்கு அடிக்கும் வெயிலில், தங்கள் அழகிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அப்புறம் எப்படி வாய்ப்பு கிடைக்கும். எனவே, சுற்றுலா என்ற பெயரில், வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர், நடிகைகள். இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இடம் பெற்றிருப்பது, பாலிவுட், கோலிவுட் ரசிகர்களால், மெழுகுச் சிலை என, புகழப்படும், தமன்னா.விரைவில், தன் குடும்பத்துடன், அமெரிக்காவுக்கு பறக்க போகிறார், அவர். அங்கு மூன்று வாரம், ஆசை தீர, ஹாலிவுட் ஸ்டூடியோ, டிஸ்னி லேண்ட், ஸ்கை ரிசர்ட் என, சுற்றிப் பார்த்து, ஆட்டம் போட்டு விட்டு தான், இந்தியா திரும்புவாராம். இதுபற்றி, தமன்னாவிடம் கேட்டால்,"இந்த சுற்றுப் பயணம், ஏற்கனவே திட்டமிட்டது. அந்த நேரத்தில், ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால், சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டேன். இப்போது, கேப் கிடைத்துள்ளது, அமெரிக்காவுக்கு ஜூட் விட வேண்டியது தான் என, உற்சாகம் பொங்க பேசுகிறார், தமன்னா.
"அரபு குதிரைமும்பை பாப் பாடகி
சமீபகாலமாக, மொழி தெரியாதவர்களை பின்னணி பாட வைப்பது, ஒரு பேஷனாகி விட்டது. என்ன தான், தமிழை அவர்கள் கடித்து துப்பினாலும், அது கூட ஒரு அழகு தான் என்று ரசிக்கிறது சினிமா வட்டாரம்.அந்த வகையில், புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், ஒரு குத்துப் பாடலை பாட, மும்பையில் இருந்து பாப் பாடகி ஷிபானி காஷ்யப் என்பவர் வரவழைக்கப்பட்டு, பாடலும் பதிவானது. "அரபுக்குதிரை என்ற வரிகளுடன் துவங்கும், அந்த பாடலை, நடனமாடிக் கொண்டு, அவர் பாடிய விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது. அதனால், "பாடலுக்கு நீங்களே நடனம் ஆடினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் விருப்பம் தெரிவிக்க, உடனே ஓ.கே., சொல்லி அதிரடி ஆட்டமாடி அசத்தியுள்ளாராம் ஷிபானி.
நடிகைகளுக்கு சிபாரிசு செய்கிறேனா? - விக்ரம் பிரபு
முதல் படத்தில் யானைப் பாகனாக நடித்தீர்கள், அடுத்த படத்தில் என்ன கேரக்டர்?
படத்தின் பெயரே, " இவன் வேற மாதிரியினா பார்த்துக்கோங்க. வித்தியாசமான கேரக்டர். படத்தில், காமெடி, சென்டிமென்ட், பாட்டு, பைட்டுனு ஜனரஞ்சகமான திரைக்கதை. இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும். தியேட்டரில் இருக்கும் நேரம், ஜாலியாக கழிய வேண்டும் என்பதே, இன்றைய இளைஞர்களின் விருப்பம். அதற்கு, இந்த படத்தில் உத்தரவாதம் உண்டு.
கதைகளை தேர்வு செய்வதில், தந்தையின் தலையீடு உண்டா?
இல்லை. நான், நடிக்கப் போகும் படங்களுக்கான கதையை, நான் தான், "ஓ.கே., செய்கிறேன். வியாபார ரீதியாகவும், வித்தியாசமாகவும் உள்ள கதையை தேர்வு செய்து நடித்தால் தான், சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். என்னுடைய படத்தின், "ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு, வரக் கூடாது என, அப்பாவிடம் அன்பு கட்டளை போட்டுருக்கேன்னா பார்த்துக்கோங்க.
லட்சுமி மேனனுடன் மீண்டும் நடிக்கும் எண்ணம் உண்டா?
இயக்குனர்கள், கதையை ரெடி செய்யும்போதே, அந்த கதைக்கு ஏற்ற, ஹீரோயினை தேர்வு செய்து விடுவார்கள். இதில், எனக்கு எந்த வேலையும் இல்லை. நான், இயக்குனரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன். அப்போது தான், படம் நினைத்த மாதிரி வரும். நடிகைகளுக்கு சிபாரிசு செய்வது, என் வேலை அல்ல.
இளம் இயக்குனர்கள், உங்களுக்கு கதை சொல்ல தயங்குவதாக கூறப்படுகிறதே?
தயங்க தேவையில்லை. யார் மூலமாக என்னை தொடர்பு கொள்ளலாம் என, திரையுலகில் உள்ளவர்களுக்கு தெரியும். சரியான முறையில் அவர்களை அணுகினால், என்னுடன் பேச, அவர்களுக்கு எந்த தடையுமிருக்காது.
உங்கள் நடிப்புக்கு, வீட்டில் கிடைத்த வரவேற்பு குறித்து?
தாத்தாவும், அப்பாவும் சினிமாவில் நிறைய"ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். பல வெற்றிகளை தொடர்ந்து பார்த்த என் குடும்பத்தினருக்கு, என் வெற்றி, மிகச்சாதாரணம் தான். எனக்கு வேண்டுமென்றால், இது பிரமாண்ட வெற்றியாக தெரியலாம்.

இளம் நடிகரை நெகிழ வைத்த அஜீத்
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வந்த அஜீத், அப்படத்தை முடித்து
விட்டு, இப்போது, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்டார்.
தற்போது, ஆந்திராவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்துக்கான முதல் நாள் படப்பிடிப்பு துவங்கப்பட்ட போது, டைரக்டர் சிவா,
அஜீத்திடம் "முதல் ஷாட்டில் சென்டிமென்ட்டாக நீங்கள் நடித்தால் சரியாக
இருக்கும் என்றாராம்.ஆனால், அஜீத்தோ, "என்னை வைத்து, அப்புறம் கூட
எடுத்துக் கொள்ளலாம். முதலில் விதார்த் போன்ற, வளர்ந்து வரும் ஸ்டார்களை
வைத்து முதல் ஷாட்டை எடுங்கள் என்றாராம். அதைக் கேட்ட விதார்த் மனம்
நெகிழ்ந்து போனாராம். ஓடிச்சென்று அஜீத்தை கட்டிக் கொண்டு, "உங்க மனசு
யாருக்கும் வராது என்றாராம்.
பாலிவுட்டின் பழம்பெரும் பின்னணி பாடகி மரணம்!
பாலிவுட்டின் பழம்பெரும் பின்னணிப் பாடகி, ஷம்ஷத் பேகம், 94, உடல்
நலக்குறைவால் நேற்று மும்பையில் இறந்தார். இந்தி, பெங்காலி, மராத்தி,
குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ் மொழிகளில், ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள
ஷம்ஷத், தன் மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். கடந்த சில
மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று வீட்டில்
இருக்கும் போது இறந்தார்.
கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்!
கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது,
போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல
தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த
புகார் மனு விவரம்:
விஜய் "டிவி சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளரான, நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், "உங்களுக்கு கமலை பிடிக்குமா? என, கேட்கிறார். எல்லாரும் பிடிக்கும் என்கின்றனர். ஒரு நடுத்தர வயது பெண், "எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ், "உங்களுக்கு, கமலிடம் நிறைவேறாத ஆசை, என்ன? என, கேட்கிறார்.
அந்த பெண், "கமலை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார். "இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, "என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன் என்கிறார். இந்த நிகழ்ச்சியில், "நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு? என, பிரகாஷ் ராஜ் கேட்க, "நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்று கமல் கூறியுள்ளார்.
இதுதவிர, நடிகை திவ்யதர்ஷினி என்பவரும், கமலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை, குடும்பத்துடன் பார்க்கும் பொது அறிவு நிகழ்ச்சியில், இது போன்ற அடுத்தவர் மனைவி, நடிகரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும், நடிகர், நடிகை இருவரும், கணவன் மனைவியாக இல்லாமல், "உடலுறவில் ஈடுபடுவோம் என்பதும், நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதுடன், பாலியல் வன்கொடுமைகளை தூண்டுவதாக உள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய, விஜய் "டிவி நிர்வாகம், நடிகர்கள் கமல், பிரகாஷ்ராஜ், நடிகை கவுதமி மற்றும் நடுத்தர வயது பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)