Monday, April 1, 2013

புஷ்டியான அருந்ததி

"வெளுத்துக்கட்டு படத்துக்காக பெங்களூரில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அருந்ததி. முதல் படத்தில், நன்றாக நடித்த போதும், அருந்ததிக்கு, சரியான படங்கள் அமையவில்லை.அதே சமயம், சில படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள், அவரது ஒல்லிக்குச்சியான உடல்வாகு கவர்ச்சிக்கு எடுபடாது என்று,  பின்னர் நீக்கி வந்தனர்.இதனால், அதிர்ச்சியடைந்த அருந்ததி, இப்போது  தன் உடம்பில் எடை போடும் முயற்சிகளில் தீவிரமடைந்துள்ளார். இயற்கையிலேயே, அவரது உடல் கட்டு ஒல்லியானது என்பதால், இரண்டு மாதங்களாக உடம்பில் சதை போடும் உணவுகளை எடுத்து வந்த அருந்ததி, இப்போது தான் ஓரளவு புஷ்டியாகி உள்ளாராம். இதையடுத்து, கிராமிய கதைகளை தவிர்த்து விட்டு மாடர்ன் கதைகளில் நடித்து, கவர்ச்சி கதாநாயகி ஆகப் போகிறாராம் அருந்ததி.

No comments:

 
FreeWebSubmission.com