Sunday, January 6, 2013

ஜெயம் ரவிக்கு புத்தாண்டு பரிசு

ஜெயம் ரவிக்கு, எதிர்பாராத இடத்தில் இருந்து, புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது. பிரபல நடிகர்கள் அனைவருமே, தங்கள் ரசிகர்களுடன், சர்வதேச அளவிலான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, "பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில், கணக்கு வைத்துள்ளனர். பாராட்டு, விமர்சனம், வாழ்த்துபோன்றவற்றை, ரசிகர்கள், உடனுக்குடன், தங்கள் அபிமான நடிகர்களுக்கு தெரியப்படுத்துவதற்கான தளமாகவும், ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையேயான இணைப்பு பாலமாகவும், இந்த சமூக வலைத் தளங்கள் திகழ்கின்றன. ஜெயம் ரவிக்கும், "டுவிட்டர் வலைத் தளத்தில், கணக்கு உள்ளது. இதில், இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை, சமீபத்தில், ஒரு லட்சத்தை தொட்டுள்ளது. "இது எனக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என, டுவிட்டரில் தெரிவித்துள்ளார், ஜெயம் ரவி.

No comments:

 
FreeWebSubmission.com