Sunday, January 6, 2013

விஸ்வரூபம் பிரச்சினை- கமலுக்கு கைகொடுப்பாரா ரஜினி?

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் கமல் வெளியிடுகிறார் என்றதும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் அதிர்ச்சியில் இருப்பதோடு, அதை முறியடித்து விட வேண்டும் என்கிற முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு பலர் ஆதரவு தெரிவித்தபோதும், கமல்பக்கமும் ஒரு சாரர் நிற்கிறார்கள். அதுதான் இப்போது பிரச்சினையாகி இருக்கிறது. அதனால் கமலின் ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் எப்படியாவது இழுத்து கமலுக்கு தியேட்டர்காரர்கள் ஆதரவு இல்லை என்பதை உணர்த்தி விட வேண்டும் என்ற கடுமையான வேலைகள் நடந்து வருகிறது.

ஆனால் இந்த நேரத்தில் கமலின் உயிர் நண்பரான ரஜினிகாந்த், இன்னமும் இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பது பற்றியும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விசயத்தில் அவர் கமலுக்கு ஆதரவா? இல்லை எதிர்ப்பா? என்பது புரியாமல் இருக்கிறார்கள். அதனால் இதில் ரஜினி தலையிட்டால் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று சில முக்கியமான தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் ரஜினியை சந்திக்க முயற்சி எடுத்து வருகிறார்களாம். ஆனால், பிரச்சினை பூதாகரமாக வெடித்திருப்பதால், யாருக்கும் பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டு வருகிறாராம் ரஜினி. அதனால் அவர் கமலுக்கு கைகொடுப்பாரா? இல்லை கைவிரிப்பாரா? என்பது குறித்த புரியாத நிலை நீடித்து வருகிறது.

No comments:

 
FreeWebSubmission.com