மத்திய அரசின் சேவை வரியால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார். மத்திய அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 12.36 சதவிகிதம் சேவை வரி விதித்துள்ளது. இதை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் திரையுலகினர் மட்டும் இதனை எதிர்த்து வருகின்றனர். இதைக் கண்டித்து இன்று (7ம் தேதி) திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இந்த போராட்டம் நடந்து வருகிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி எனப்படும் சினிமா தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட 16 சங்கங்கள் இந்த போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இதில் நடிகர்கள் ரஜினி, விஜய், சரத்குமார், சூர்யா, கார்த்தி, ராதாரவி, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சந்திரசேகர், சாந்தனு, ஜித்தன் ரமேஷ், விஷ்ணு, பாண்டியராஜன், பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் ராதிகா, வடிவுக்கரசி, ரேகா, நளினி, குயிலி, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா-சினேகா உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து சின்னத்திரை பெரிய, வெள்ளித்திரை கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
ரஜினி பேசுகையில், கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்காக வரியை அதிகப்படுத்துவதாக மத்திய அரசு கூறுகிறது. இதுபோன்று வரியை அதிகப்படுத்துவதால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும். எனவே இந்த சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டம் போட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment