Wednesday, December 5, 2012

ப்ரியாமணியின் மார்க்கெட் குடை சாய்ந்தது!

சாருலதா படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த ப்ரியாமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்றாலும் அதன்பிறகு தமிழில் அவருக்கு படவாய்ப்பு கிடைக்காதபோதும் தெலுங்கில் அன்குலிகா என்றொரு படம் கிடைத்தது. ஆனால் அப்படத்தில் நடித்து முடித்து விட்டவருக்கு அடுத்தபடியாக படமே இல்லை. இதனால் பருத்திவீரனுக்குப்பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பரவலாக ரவுண்டு கட்டி வந்த ப்ரியாமணி இப்போது ஓய்ந்து போய் காணப்படுகிறார்.

இதற்கு என்ன காரணம்? என்று விசாரித்தபோது, சாருலதா படத்தில் நடித்து வந்தபோது திடுதிப்பென்று தனது படக்கூலியை 40 லகரத்தில் இருந்து 50க்கு உயர்த்தி விட்டாராம் ப்ரியாமணி. அதனால்தான் அதுவரை அவரிடம் பட விசயமாக பேசிக்கொண்டிருந்த சில படாதிபதிகள் பின் வாங்கி விட்டார்களாம். அதோடு அந்த படமும் தோல்வி அடைந்து விட்டதால் இப்போது ப்ரியாமணியின் மார்க்கெட் குடை சாய்ந்து கிடக்கிறது. என்றாலும் சில நடிகைகளைப்போல் மார்க்கெட் கவிழ்ந்ததும் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு குட்பை சொல்ல விரும்பாத ப்ரியாமணி, இப்போது பிரபல டைரக்டர்களை விடுத்து தனக்கு பரிட்சயமான வளர்ந்து வரும் சில இயக்குனர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார்.

No comments:

 
FreeWebSubmission.com