Wednesday, December 5, 2012

ஆங்கிலத்தில் இசை ஆல்பம் வெளியிட மம்தா ஆர்வம்

"சிவப்பதிகாரம், தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ள மம்தா மோகன் தாசுக்கு,  தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. ஆனால் மலையாளத்தில், ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் மம்தா மோகன் தாஸ், உண்மையில், பல திறமைகளை உடையவர். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில், சில பாடல்களை பாடியுள்ளார். இதற்காக, தெலுங்கின், சிறந்த பின்னணி பாடகி  விருதும், இவருக்கு கிடைத்துள்ளது. தன் இசை பயணத்தின், அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார், மம்தா. விரைவில், ஆங்கில மொழியில் தயாராகும், இசை ஆல்பத்தை வெளியிடப் போகிறார். இதில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும், அவரே பாடப் போகிறாராம். "இசை ஆல்பம் வெளியிடுவதற்கு, ஆங்கில மொழியை ஏன் தேர்வு செய்தீர்கள்" என, கேட்டால், "நான், முறைப்படி இந்துஸ்தானி இசையை கற்றுள்ளேன். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட, பல மொழிகள் எனக்கு தெரியும். அதிலும், ஆங்கிலத்தில், நான் ரொம்ப ஸ்ட்ராங். அதனால் தான், இசை ஆல்பத்துக்காக, ஆங்கிலத்தை தேர்வு செய்தேன் என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com