ரூ.35 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள, அக்மார்க் மசாலா படம். பாலிவுட்டில் அடிதடிக்கு பெயர் பெற்ற, அக்ஷய் குமார் தான், படத்தின் ஹீரோ. இதனால், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு குடி பெயர்ந்த, அசின். ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் ஆகியவை, சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட படம் என்பதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாலிவுட்டின் மாஜி பிரபலங்கள், மிதுன் சக்ரவர்த்தி, ராஜ் பப்பர் போன்றவர்களும் நடித்துள்ளனர். ஆஷிஷ் ஆர்.மோகன், இயக்கியுள்ளார். ஹிமேஸ் ரேஸ்மானியா, இசையமைத்துள்ளதுடன், முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். "அனைத்து வயதினரையும் கவரும் வகையில், படத்தை தயாரித்துள்ளோம். எங்களின் வெற்றி இலக்கு, கண்டிப்பாக தவறாது என, நம்பிக்கையுடன் கூறுகிறார், படத்தின் இயக்குனர்.
Wednesday, December 5, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment