Wednesday, December 5, 2012

பாலிவுட் போகிறார் நயன்தாரா

"கஜினி இந்தி "ரீ-மேக் படம் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார் அசின். அதனால், தென்னிந்திய சினிமாவில் புகழ் பெறும் அத்தனை நடிகைகளுக்குமே, பாலிவுட்டிலும் கொடி நாட்ட வேண்டும்  என்பது கனவாகிவிட்டது. அந்த வரிசையில் காஜல் அகர்வால், இலியானா, தமன்னாவை தொடர்ந்து இப்போது நயன்தாராவுக்கும், இந்தி சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தெலுங்கில் தான் நடித்த "கிருஷ்ணன் வந்தே ஜகத்குரும் என்ற படம் இந்திக்கு டப்பிங் ஆவதை அடுத்து, நேரடி இந்தி படங்களை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்காக, "மேற்படி டப்பிங் படத்தின் பிரமோஷன்களிலும் நான் கலந்து கொள்கிறேன் என்று முன்மொழிந்துள்ளாராம் நயன்தாரா.

No comments:

 
FreeWebSubmission.com