3 படத்தில் அனிருத் இசையில் ஒய்திஸ் கொலை வெறி என்றொரு பாடலை எழுதி பாடி உலக அளவில் புகழ் பெற்றவர் தனுஷ். அதனால் அதன்பிறகு படத்துக்குப்படம் தான் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கி உள்ளது. ஆனால் அந்த ஆசை பரத்பாலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள மரியான் படத்தில் ஈடேறவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை என்பதால் அதுகுறித்து தனுஷ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் தற்போது தான் தயாரித்து வரும் எதிர்நீச்சல் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார் தனுஷ். இப்படத்துக்கும் கொலை வெறி அனிருத்தே இசை என்பதால், மீண்டுமொரு கொலை வெறி கொண்டாட்டத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே இருவரும் ப்ளான் போட்டு விட்டனர். அந்த வகையில் இந்த படத்திலும் ஒரு குத்து பாடலை தானே பாடி அதற்கு குத்தாட்டமும் ஆடியிருக்கிறார் தனுஷ். ஒய்திஸ் கொலைவெறிடி பாடலுக்கு ஆடியதை விட இந்த படத்தின் பாடலுக்கு அதிவேட்டு நடனமாடியிருக்கிறாராம் சுள்ளான்.

No comments:
Post a Comment