Wednesday, December 12, 2012

டாக்டர்கள் எப்போதும் நோயாளிகளுடன்தான் இருக்க வேண்டுமா?: நடிக்க வந்த டாக்டர் ஆவேசம்

மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். இவர் தானே தயாரிக்கும் அகிலன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வித்யா என்ற நடிகை. இவர் தவிர இந்தப் படத்தில் ராஜ்கபூர், சிங்கம்புலி, கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். இந்த படம் தொடர்பாக நடந்த பிரஸ் மீட்டில் டாக்டர் சரவணன் பேசியதாவது: நான் ஆசைப்பட்டது மாதிரி டாக்டராகி ஒரு மருத்துவமனை கட்டி நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்து வருகிறேன். என்னால் முடிந்த சில சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். ஆடுகளம் படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த மேரியம்மாதான் டாக்டர் நீங்க அழகா இருக்கீங்க. சினிமால நடிச்சா பெரிய ஆளா வருவீங்கன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வச்சாங்க. ஆனாலும் என் மருத்துவ சேவை பாதிக்காம தினமும் பேஷண்டை கவனித்துவிட்டு மாலை நேரங்களில்தான் நடித்தேன். பத்து நாளில் என் போர்ஷனை எடுத்து விட்டார்கள். பத்து நாளில் சண்டை போட்டு, டூயட்டும் பாடி விட்டேன்.

சில பேர் இது டாக்டருக்கு தேவையில்லாத வேலை என்று கூறினார்கள். நான் அவர்களை கேட்கிறேன். டாக்டரும் மனுஷன்தானே அவனுக்கு ஆசாபாசங்கள், ஆசைகள் இருக்க கூடாதா? டாக்டர்கள் என்றால் வைத்தியம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? வேறு துறையில் ஈடுபடக்கூடாதா. எப்போதும் நோயாளிகளுடன்தான் இருக்க வேண்டுமா, தொழில்மன அழுத்தத்திலிருந்து விடுபட இதுபோன்று கலையில் ஈடுபடுவது தவறா?. நான் பணத்துக்காக படம் எடுக்கவில்லை. சினிமா மூலம் மக்களுக்கு நாலு நல்ல கருத்தைச் சொல்லத்தான் படம் எடுக்கிறேன். இனி வருடத்துக்கு ஒரு படம் எடுப்பேன். நடிப்பேன். என்றார்.

அப்படி போடுங்க டாக்டர்...!!

No comments:

 
FreeWebSubmission.com