Wednesday, December 12, 2012

தர்மபுரி கலவரம் பற்றிய சினிமா

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் மாமன் மச்சான். அமுதன், அபிநிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எம்.ஜெயராஜ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு ஊரே ஜாதி வெறியுடன் இருக்கிறது. ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. இந்த நிலையில் பக்கத்து ஊரில் உள்ள இன்னொரு ஜாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊருக்கு அழைத்து வருகிறான் பஞ்சாயத்து தலைவர் மகன். இதனால் கொதிப்படையும் பஞ்சாயத்து தலைவர் பெண்ணின் ஊரையே அழிக்க திட்டமிடுகிறார். திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்க நினைக்கிறார். அமைதியாக இருந்த ஊர்கள் கலவர பூமியாகிறது. இதற்கு என்ன தீர்வு என்பதுதான் கதை. மாமன் மச்சான்களாக வாழ்ந்த மக்கள் இப்போது ஜாதியால் பிரிந்து கிடப்பது அரசியல் சதியால்தான் என்பதை சொல்லும் படம். தர்மபுரி கலவரத்தை கருத்தில் கொண்டு படம் எடுக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் தர்மபுரியில் நடந்திருப்பது யதேச்சையாக அமைந்தது. என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com