Friday, November 2, 2012

தமிழ் படங்களில் இருந்து வெளியேறிய ரிச்சா

"மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சா, அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவரை, விஷ்ணுவர்த்தன் இயக்கி வரும் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தனர். கதையை கேட்ட  ரிச்சா, "என் கேரக்டருக்கு பர்பாமென்ஸ் பண்ண போதுமான வாய்ப்பு இல்லை என்று நடிக்க மறுத்தார். அதன் பின் தான் அந்த வேடத்துக்கு டாப்ஸியை புக் செய்தனர்.  இந்த நிலையில், கார்த்தி நடிக்கும், "பிரியாணி படத்தில் நடிப்பதற்கும், ரிச்சாவிடம் பேசி வந்தார் அப்பட டைரக்டர் வெங்கட் பிரபு. முதலில் நடிக்க சம்மதம்  சொன்ன அவர், பின் இன்னொரு நாயகியும் இருப்பது போல் கதையை மாற்றியதால், அப்படத்தில் இருந்தும் இப்போது விலகிவிட்டார். இதையடுத்து, "நல்ல வேடங்கள் கிடைத்தால் மட்டுமே, தமிழுக்கு வருவேன். இல்லையேல் தெலுங்கிலேயே நீடிப்பேன் என்று கூறியுள்ளார் ரிச்சா.

No comments:

 
FreeWebSubmission.com