Thursday, November 22, 2012

எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகை ஹன்சிகா- சிம்பு!

ஒஸ்தி படத்தில் வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி என்று ரிச்சாவைப்பார்த்து பாடினார் சிம்பு. அவரிடத்தில் உங்களுடன் நடித்த நடிகைகளின் எந்த நடிகை ரொம்ப க்யூட் என்று கேட்டால், ஹன்சிகாதான் என்கிறார். எதை வைத்து சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது, ஒரு பெண்ணைப்பார்த்ததும் நமக்குள்ளே ஏதோ கலவரம் நடக்க வேண்டும். கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்க வேண்டும். அப்படி எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகைதான் ஹன்சிகா.
ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அவரை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆனால் இப்போது கவனத்துக்கு வந்து விட்டார். அதனால்தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகி விட்டார்கள். என்னைப்பொறுத்தவரை எனது படங்களின் நாயகிகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்துவேன். வேட்டை மன்னன், வாலு படங்களுக்கு ஹன்சிகாவை புக் பண்ணியதுகூட ஒரு விதத்தில் அவரது அழகை முன் வைத்துதான். அவரை ரசிக்கும் ரசிகர்கள் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தோடும் ஒன்றிப்போவார்கள். இது படத்துக்கும் ப்ளஸ்சாக இருக்கும் என்கிறார் சிம்பு.

No comments:

 
FreeWebSubmission.com