கமல் நடித்த நம்மவர் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் கரண். அதன்பிறகு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டவர் ஒரு கட்டத்தில் கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார். ஆனால் பின்னர் தொடர்ச்சி நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் கரண். அந்த நேரத்தில் அவரை கேரக்டர் ரோல்களில் நடிக்க சில இயக்குனர்கள் அழைத்தனர். ஆனால் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்பது போல் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன். இல்லையேல் வீட்டில் உட்கார்ந்திருப்பேன் என்று சொல்லி விட்டார்.
அப்படி உறுதியாக இருந்தவருக்கு மீண்டும் கொக்கி, காத்தவராயன், கருப்பசாமி குத்தகைதாரர் என்று சில படங்கள் புக்காகி அதையடுத்தும் பல படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் மறுபடியும் அவர் நடித்த படங்கள் படுத்துக்கொள்ளவே மீண்டும் காணாமல் போய் விட்டார் கரண். கடைசியாக அவர் நடித்த சூரன், கந்தா ஆகிய படங்கள் இன்னும வியாபாரமாகாமல் கிடப்பில் கிடக்கின்றன. இந்தநிலையில், சிலர் மீண்டும் அவரை கேரக்டர்களில நடிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் இப்போதும் என் மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார் கரண்.

No comments:
Post a Comment