43வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று(20.11.12) கோவாவில் குதூகலமாக தொடங்குகிறது. மத்திய தகவல்தொடர்புதுறை அமைச்சர் மனிஷ் திவாரி, கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், பிரபல இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான், பிரபல இந்தி பாடகர் கைலாஷ் கேர், துப்பாக்கி பட நாயகி காஜல் அகர்வால் ஆகியோர் துவக்க விழாவில் பங்குபெறுகின்றனர். இந்தி நடிகர் கபீர் பேடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
43வது கோவா திரைப்பட விழாவின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ்கள்...
* துவக்க விழா, பனாஜியில், கலா அகாடமி அரங்கிற்கு அருகே உள்ள பெரிய கால்பந்து மைதானத்தில், சுமார் 3 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்க கூடிய வகையில் ஏ.சி., வசதிகளுடன், ரூ.1 கோடியே 23 லட்சம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
* பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா பாலி முதல் தற்போது உள்ள கரீனா கபூரை வரை பல்வேறு நடிகைகளின் படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்த பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ் கான் துவக்க விழா கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.
* போலாந்தை சேர்ந்த பிரபல இயக்குநர் கிறிஸ்டவ் ஜனுஸிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
* இந்திய சினிமாவின் 100வது ஆண்டு என்பதால், அதை கொண்டாடும் வகையில், ராஜா ஹரிச்சந்திரா(1913), சாந்தி துளசிராம்(1936), ஜெமினியின் சந்திரலேகா(1948), ராஜ்கபூரின் ஆவாரா(1951), சத்யஜித் ரேயின் பதர் பாஞ்சாலி, குரு தத்தின் ப்யாஸா(1956), முகலே ஆஸம் (1960), செம்மீன் (1965), சம்ஸ்சாரா(1970), பகீஸா (1971), ஷோலே (1975), ஆதி சங்கரர் (1985), அமீர்கானின் லகான் (2001), மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் (2002), தாசரி நாராயணராவ்வின் மேக சந்தேசம், ரன்பீர் கபூரின் பர்பி உள்பட பல சிறந்த படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
* மறைந்த பிரபல கலைஞர்களை கவுரவிக்கும் வகையில், யாஷ் சோப்ராவின் தூள் கா பூல், தேவ் ஆனந்தின் கெய்ட், ராஜேஷ் கன்ருவின் ஆனந்த், அப்பச்சனின் எண்டே மம்முக்குட்டி அம்மா போன்ற படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் 70 நாடுகளில் இருந்து சுமார் 162 படங்களும் இங்கு திரையிடப்படுகின்றன.
* இந்தியன் பனோரமாவில் 147 படங்களிலிருந்து 20 சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து அதிகளவு படங்கள் தேர்வாகியுள்ளன.
* தமிழ் சினிமாவில் இருந்து ஒரே ஒரு படமாக வாகை சூட வா தேர்வாகியுள்ளது.
* துவக்க விழாவையொட்டி ஆங் லீ இயக்கியுள்ள, தி லைப் ஆப் பை 3டி படம் முதல்படமாக திரையிடப்படுகிறது. இப்படம் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.
* ஓ மை காட் இந்தி படத்தின் மூலம் இந்துக்களின் உணர்வை பாதிக்கும்படி படம் எடுத்து, அதில் நடித்த அக்ஷ்ய் குமாரை துவக்க விழாவிற்கு அழைக்க கூடாது என்று இந்து ஜன ஜாக்ருதி சமதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

No comments:
Post a Comment