பாலிவுட் ரசிகர்களின் பியூட்டி குயின் தீபிகா படுகோனே, "கோச்சடையான் படம் மூலம், கோடம்பாக்கத்திலும் காலடி வைத்துள்ளார். மிகப் பெரிய பொருட்செலவில், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாராகும் இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார், தீபிகா. ஜப்பானில், ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், ஜப்பானிஷ் மொழியிலும், இந்த படத்தை "டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். "இந்த படத்தில், ஜப்பானிஷ் மொழியில், உங்கள் கேரக்டருக்கு நீங்களே குரல் கொடுக்கிறீர்களா என, இயக்குனர் தரப்பில் தீபிகாவை அணுகியபோது, "ஜப்பானிஷ் மொழியா, ஆளை விடுங்கள்; அதெல்லாம் எனக்கு தெரியாது; வேறு, யாரையாவது "டப்பிங் கொடுக்க வையுங்கள் என, கெஞ்சலாக கோரிக்கை விடுத்தாராம், தீபிகா. இதையடுத்து, தீபிகாவுக்காக, வேறு ஒருவரை "டப்பிங் பேச வைக்க, படப்பிடிப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Thursday, November 1, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment