Thursday, November 1, 2012

இதற்காக தானே காத்திருந்தேன்! - திவ்யா ஸ்பந்தனா

"குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் படங்களில் நடித்தாலும், கன்னடத்தில் தொடர்ந்து, "பிசியான நடிகையாகவே வலம் வருகிறார், திவ்யா ஸ்பந்தனா. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கன்னட  திரையுலகை கலக்க, அவர் தவறுவது இல்லை. ஆனாலும், கன்னடத்தின் முன்னணி நடிகரான,  சிவ்ராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற, திவ்யாவின் ஆசை, நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்தது. இப்போது, அந்த ஆசையும் நிறைவேறி விட்டதாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,"சிவ்ராஜ் குமார்  ஜோடியாக, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய, 10 ஆண்டு கனவு. இத்தனை நாளாக அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, ராஜேந்திர பாபு இயக்கும் ஒரு புதிய படத்தில், சிவ்ராஜ் குமாரும், நானும் ஜோடி சேரப் போகிறோம். இதற்காக தானே, இத்தனை நாளாக காத்திருந்தேன். வானத்தில் பறப்பது போல், உற்சாகமாக இருக்கிறது என, உருகுகிறார், திவ்யா. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஒன்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படம், கன்னட திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

 
FreeWebSubmission.com