டைட்டானிக், கோனான் போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக இருந்தவர், பிரைன் ஜென்னிங்ஸ். ஹாலிவுட்டில் இவருக்கு, கிராபிக்ஸ் புலி என்ற பட்டப் பெயர் உண்டு. அமெரிக்காவை சேர்ந்த இவரின் பெருமையை கேள்வி பட்ட கமல், "தசாவதாரம் படத்திற்கு கிராபிக்ஸ் செய்வதற்காக, தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்தார். தற்போது ஏராளமான படங்களுக்கு, கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார், பிரைன். "ஒண்டி புலி என்ற தமிழ் படத்தில், முல்லை பெரியாறு அணையை கட்டிய, பென்னி குயிக்கின் கொள்ளுப் பேரனாக நடித்து உள்ளார். இந்த தகவல், கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. "தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என, பிரைனிடம் கேட்டபோது, "நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால், கண்டிப்பாக நடிப்பேன். வில்லன் ரோல் என்றால், டபுள் ஓகே என, கையை உயர்த்தி, உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.
Thursday, November 1, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment