நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் தொடர்ந்து 6 ஆண்டும் கோவா திரைப்பட விழாவை ஒட்டி, பிலிம் பஜார் 2012ஐ வெற்றிகரமாக நான்கு நாட்கள் நடத்தியது. இந்தியா உள்பட 32 நாடுகளிலிருந்து 750 டெலிகேட்கள் இதில் பங்கு பெற்றார்கள். இந்திய படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் ஏற்படுத்தவும், வெளிநாடுகளுடன் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இணைந்து செயல்படவும் இந்த பிலிம் பஜார் உதவுகிறது. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிலிம் பஜாரை துவக்கி வைத்தார். சன்ரைஸ் (அருணோதய்) அன் இந்தியன் கிஸ் மசாலா - மூன்று படங்களுக்கும் இந்த பிலிம் பஜாரில் தயாரிப்பில் பங்கேற்க (சர்வதேச) வெளிநாட்டு பார்ட்னர்கள் கிடைத்துள்ளார்கள். (மசாலா - மராத்தி படம்) மேலும் சில படங்களுக்கான ஏற்பாடுகள், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல இந்திய படங்களுக்கு என்.எஃப்.டி.சி. தயாரிப்பதற்கு பண உதவி செய்து வருகிறது. இவ்வாறு உதவி பெற்ற பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Monday, November 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment