Friday, October 26, 2012

சினிமாவாகிறது ரியல் எஸ்டேட் தில்லுமுல்லுகள்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் கல்லாப்பெட்டி, அஸ்வின் பாலாஜி, ரோஸின் ஜாலி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள், நமோ நாராயணா வில்லன். ஜி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், சபேஷ்-முரளி இசை அமைக்கிறார். பல குறும்படங்களை இயக்கிய ரா.ரா இயக்குகிறார். "ஹீரோ ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். பல தில்லுமுல்லுகளை செய்து குறுகிய காலத்தில் பணக்காரனாகிவிட நினைப்பவர். கோடிகளில் பிசினஸ் செய்வதாக காட்டிக் கொண்டு சிங்கிள் டீக்கு அல்லல் படுகிறவர். இப்படி ஒரு ஜாலியான கதை. பணம்தான் உலகில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பணம் இல்லாத மனிதன் பிணம் என்கிற மெசேஜயும் சொல்கிறோம்". என்கிறார் இயக்குனர் ரா ரா.

புரட்யூசரு ரியல் எஸ்டேட் அதிபருங்களா...?

No comments:

 
FreeWebSubmission.com