புகழ் பெற்ற மராத்தி மொழி திரைப்படம் மும்பை புனே மும்பை. அந்த மொழியில் பல விருதுகளை பெற்று பெரிய வெற்றி பெற்ற படம். முன்பின் அறிமுமில்லாத நாயகனும், நாயகியும் ஒரு பயணத்தில் அறிமுகமாகி ஒரே நாளில் அவர்களுக்குள் நடக்கும் பகிர்ந்து கொள்ளுதல்தான் படம். இந்த படத்தை தழுவித்தான் தமிழில் கண்டேன் காதலை, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் வந்தது. இப்போது அந்தப் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறார்கள். படத்தின் பெயர் நீ நான் மட்டும். ஒரிஜினல் படத்தில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயணவழிதான் கதைக் களம். தமிழில் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பயணவழிதான் கதைக் களம். யஷ்வின், நிகிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கண்மணி இயக்குகிறார்.
Friday, October 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment