Friday, October 26, 2012

250 தியேட்டர்களில் தமிழ் பேசப்போகிறார் ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது ஜேம்ஸ் பாண்டாக வருகிறது  ஸ்கைஃபால். இதிலும் டேனியல் க்ராக்தான் ஜேம்ஸ் பாண்ட். நயோமி ஹாரிஸ் ஹீரோயின், ஜேவியம் பேர்டன் வில்லன். சர்வதேச பயங்கரவாத கும்பலின் சதிவேலையை முறியடிப்பது மாதிரியான வழக்கமான கதை, படம் லண்டனில் தொடங்கி இஸ்தான்புல், ஜப்பான், சீனா, தாய்லாந்து, எகிப்து வழியாக அமெரிக்கைவை அடையும். இந்த நாடுகளில் எல்லாம் படம்பிடித்திருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால். படத் தயாரிப்புக்கு ஆன செலவை விட படப்பிடிப்பின் போது சேதமடைந்து கட்டிடங்கள், கார்களை சரி செய்து கொடுத்து வகையில்தான் அதிக செலவாம். இந்தியா முழுவதும் 1300 தியேட்டர்களில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. தமிழ் நாட்டில் 300 தியேட்டர்கள். அதில் 250 தியேட்டர்களில் ஜேம்ஸ்பாண்ட் தமிழ் பேசப்போகிறார்.

No comments:

 
FreeWebSubmission.com