Friday, October 19, 2012

தீபாவளிக்கு 5 படங்கள்

வழக்கமாக தீபாளிக்கு பத்து முதல் 12 படங்கள் வரை வெளிவரும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைந்த அளவிலான படங்களே வெளிவருகிறது. இந்த ஆண்டு 5 படங்கள் வெளிவருவதாக முறைப்படி அறிவித்துள்ளன. இதில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ‘துப்பாக்கி’யும், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’யும் பெரிய படங்கள். இதுதவிர மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரபு சாலமனின் ‘கும்கி’யும் வெளிவருகிறது. இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள ‘கள்ளத்துப்பாக்கி’, மன்சூர் அலிகான் நடித்து தயாரிக்கும் ‘லொள்ளு தாதா பராக் பராக்’ ஆகிய படங்களும் வெளிவருகின்றன. இந்த தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ ஆகிய படங்கள் தள்ளிப்போனதில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

 
FreeWebSubmission.com