நடிகை த்ரிஷாவுக்கு பத்து மடங்கு சமூக பார்வை உள்ளது என்றால்
ஹன்சிகாவுக்கோ நூறு சதவிகிதம் உள்ளது. தனது 21 வயதில் 21 பிள்ளைகளை
தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, படிப்பு
செலவு என அனைத்தையும் தானே பார்த்துக்கொள்கிறார். அதோடு, இன்னும் நிறைய
ஏழைகளுக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாராம்.
அதனால் தன்னிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களைப்பற்றிய முழு
விவரங்களையும் எடுத்து வருவதற்கு ஒரு கமிட்டியை உருவாக்கி
வைத்திருக்கிறார்.
ஹன்சிகாவின் இந்த சேவை ஆர்வத்தை கவனித்த நடிகர் சூர்யா, தனது அகரம் பவுண்டேஷனைப்பற்றி அவரிடம் சொன்னாராம். அப்போது ஏழை மாணவர்களை வீட்டுக்கு ஒருவர் வீதம் படிக்க வைத்தாலே போதும் அதுவே பெரிய சேவையாகும். அதை வைத்து அந்த குடும்பமே வெளிச்சமாகி விடும். மற்ற சேவைகளை விட கல்வியே சிறந்த சேவை என்றாராம். மேலும், தான் படிக்க வைக்கும் மாணவர் பட்டியலையும், நடத்தி வரும் பள்ளிகளைப்பற்றியும் ஹன்சிகாவுக்கு விளக்கினாராம்.
அவர் சொன்னதை கேட்க கேட்க ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்ற ஹன்சிகா, இதே மாதிரி எதிர்காலத்தில் நானும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி செய்வேன். முன்னதாகவே உங்களது அகரம் பவுண்டேஷனைப்போல் நானும் ஒரு பவுண்டேசனை தொடங்கப்போகிறேன் என்றும் ஆர்வமாக கூறியுள்ளாராம்.

No comments:
Post a Comment