Tuesday, February 5, 2013

எல்லை மீறும் அமலாபாலின் அலம்பல்! தலைவா ஸ்பாட் பகீர்

தலைவா படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே ஒரு மார்க்கமாத்தான் திரிகிறார் அமலாபால். ஏற்கனவே தன்னை சுற்றியிருக்க சில உதவியாளர்களை வைத்திருந்தவர், இப்போது தான் மேல்தட்டு நாயகியாகி விட்டதால், தனக்கு செக்யூரிட்டி போன்று தன்னை எப்போதும் அரவணைத்து வருவதற்காக ஒரு ஆறு பேர் அடங்கிய பாதுகாப்பு குழுவை பிரத்யேகமாக நியமித்திருக்கிறார். தினமும் தனது படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை அவர்கள் அமலாவை பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு உபசரிப்பு என அனைத்திற்கும் தயாரிப்பாளரின் கல்லாவில்தான் கைவைக்கிறார் அமலா.

இப்போது அவர் நடிப்பது பெரிய படம் என்பதோடு, அப்படத்தைஇயக்கும் டைரக்டர் விஜய்க்கு அமலாபால், நெருக்கமான நடிகை என்பதால் அவர் செய்யும் அலம்பலுக்கு இதுவரை யாருமே எதிர்ப்பு காட்டவில்லை. மாறாக அணுசரித்தே செல்கிறார்கள். அதனால் நாளுக்கு நாள் நடிகையின் போக்கு தாறுமாறாக செல்கிறதாம். அதோடு, ஸ்பாட்டுக்கும் குறித்த நேரத்தில் வருவதில்லையாம். அப்படி வந்தால் தன்னை கத்துக்குட்டி நடிகை என்று நினைத்து விடுவார்கள் என்று கருதி, முன்னணி கலைஞர்கள் வழக்கமாக வருவது போன்று டைரக்டர் டேக் வைக்கும் நேரத்தை கணக்கு பண்ணிதான் ஸ்பாட்டிற்குள் வருகிறாராம் அமலாபால்.

அதைப்பார்த்து, இதுகளெல்லாம் சினிமாவுக்கு வந்து நடிப்ப கத்துக்கிறதுங்களோ இல்லையோ, வெட்டியா பந்தா பண்றதுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் நல்லாவே கத்துக்கிடுதுங்க என்று நேரில் பார்க்கும் சினிமாத்துறையினர் கமெண்ட் அடிக்கின்றனர்.

No comments:

 
FreeWebSubmission.com