தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு தேவையில்லாமல் விஜயகாந்தை எதிர்ப்பதாக நினைத்து, அரசியலுக்குள் மூக்கை நுழைத்து, கடைசியில் மூக்குடை பட்டு சிக்கி சின்னாபின்னமாகி கடைசியில் பட வாய்ப்பே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். வடிவேலு படம் நடித்து கிட்டத்தட்ட 2 வருஷம் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதில் ஒருபடம், இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் பார்ட்-2. இப்படத்தையும் இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புதேவனே இயக்குகிறார். இதுபோக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ஏ.ஜி.எஸ்., என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு புதியபடத்தில் நடிக்க வடிவேலு கமிட்டாகி இருக்கிறார். படத்திற்கு தெனாலிராமன் என்று பெயர் வைத்துள்ளனர். இதுவும் அரச கதை தான். படத்தில் வடிவேலு இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷை வைத்து போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவ்ராஜ் தான் இப்படத்தையும் இயக்க இருக்கிறார். இப்படமும் இம்சை அரசன் போன்று முழுநீள காமெடி படமாக உருவாக இருக்கிறது.

No comments:
Post a Comment