Monday, February 25, 2013

பாடல் காட்சியில் நடித்த இளையராஜா!

ஒரு காலத்தில் இளையராஜாவை சந்திப்பதே அபூர்வமான விஷயமாக இருந்தது. அதோடு, பத்திரிகைகள் பேட்டி என்றால் வாயே திறக்க மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட அவர் தற்போது நிறையவே மாறி விட்டார். பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது மட்டுமின்றி, சில படங்களில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் டைரக்டர் செல்வா இயக்கியுள்ள நாடி துடிக்குதடி என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார் இளையராஜா.

முதலில் இதுபற்றி அவரிடம் சொல்லத்தயங்கிய செல்வா, பின்னர் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும், சொல்லித்தான் பார்ப்போமே என்று அனுமதி கேட்டிருக்கிறார். பாடலில் சூழலுக்கு தான் எந்த அளவுக்கு தேவைப்படுகிறோம் என்பதை கேட்டறிந்த இளையராஜா, மறுபேச்சின்றி நடிக்க சம்மதம் சொன்னாராம். அதையடுத்து காதல் இல்லாத தேசம் எங்கிருக்கு... என்ற அந்த பாடலில் இளம் இசைக்கலைஞர்களுடன் இளையராஜாவும் நடிப்பது போன்ற காட்சி படமாக்கியிருச்கிறார்கள். இந்தகாட்சியில் அதிக உற்சாகத்தடன் இளையராஜா நடித்துக்கொடுத்ததாகவும் சொல்கிறார் இயக்குனர் செல்வா.

No comments:

 
FreeWebSubmission.com