தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்து வரும் படம் "சாண்டி". இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும் கெட்அப்பிலேயே வந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன.
இந்த விஷயம் உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்றது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது. ப்ரியாமணி "சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக தெரியாது" என்று கூறியதாக தெரிகிறது. இயக்குனர் சமுத்திரா படத்தின் ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார் உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதைத் தொடர்ந்து ரகசியமாக வைத்திருந்த கதையை இப்போது வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரா. அவர் கூறியிருப்பதாவது: "இது அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள். கட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின் தலைவியாகிறார். அவர் சாதாரண பெண்தானே. அதுவும் மாணவிதானே என்று எதிர்கட்சியினர் எளிதாக நினைப்பார்கள். ஆனால் தனது புத்தி கூர்மையாலும், ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை. ஆந்திர அரசியலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்" என்கிறார்.

No comments:
Post a Comment