அசினைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த அத்தனை நடிகைகளுக்குமே அவரைப்போன்றொரு நடிகையாக வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. அப்படி ஆசையை வளர்த்து வைத்திருக்கும் நடிகைகளில் பூர்ணா குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழில் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் எந்த படமும் வெற்றி பெறாததால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இருப்பினும் தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் அடங்கமாட்டேன் என்று மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்து கவர்ச்சி அவதாரமும் எடுத்திருக்கிறார் பூர்ணா.
அதிலும், அசின் தமிழில் இருந்து இந்திக்கு சென்றபிறகு அவர் இடத்தை பிடிக்க எந்த நடிகையும் முயலவில்லை. அதனால் அவரது சாயலில் இருக்கும் நான், அவர் இடத்தை பிடிக்கப்போகிறேன். அதோடு, தற்போதைய சினிமாவில் கிளாமர் கதாநாயகிகளுக்கே வரவேற்பு இருப்பதால் அசினை விட கூடுதல் கிளாமர் காண்பித்து நடிக்கவும் என்னை தயார்படுத்தி விட்டேன் என்று சொல்லும் பூர்ணாவிடம், கிளாமர் என்றால் நயன்தாரா ரேஞ்சுக்கு நடிப்பீர்களா? என்று கேட்டால், தேவைப்பட்டால் அவரை மிஞ்சும் அளவுக்கும் அதிரடியாக பிரவேசிப்பேன் என்றும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

No comments:
Post a Comment