Thursday, January 31, 2013

செக்ஸி நடிகையாகும் வாகை சூடவா இனியா!

வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவை அந்த சமயத்தில் கமர்சியல் கதைகளில் நடிக்க சில இயக்குனர்கள் முண்டியடித்தனர். ஆனால் அவரோ, நான் எக்காரணம கொண்டும் கமர்சியல் கதைகளில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன். ஆழமான கருத்து கொண்ட கதைகளில்தான் நடிப்பேன் என்று அடுக்கு மொழிகளில் பேசி வந்தார். விளைவு அதன்பிறகு அம்மணியை எந்த இயக்குனர்களுமே சீண்டவில்லை. அதனால் இப்போது எக்குத்தப்பாக பேசுவதை குறைத்து விட்டு, எசகுபிசகான காட்சிகளில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வரும் கண் பேசும் வார்த்தைகள் என்ற படத்தில் கிளுகிளு காட்சிகளில் நடித்துள்ளார் இனியா. அதில் ஒரு படுக்கையறை காட்சியில், செந்திலுடன் அதிக நெருக்கமாக, நடித்துள்ளாராம். இனியா இந்த திடீர் பயர் கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, மேலும் சில இயக்குனர்கள் செக்ஸியான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

No comments:

 
FreeWebSubmission.com