Friday, January 18, 2013

டாப் ஹீரோயின் மனிஷா யாதவ்!

"வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமான மனிஷா யாதவ், தற்போது நடித்துள்ள
"ஆதலால் காதல் செய்வீர்  படம் வெளியானால், நான் டாப் ஹீரோயின் ஆகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், "இந்த படத்தில் காதல் உணர்ச்சிகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தி நடித்துள்ளேன். அதனால், இப்படத்திற்கு பிறகு, இளவட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற இடத்தையும் பிடித்து விடுவேன் என்று சொல்கிறார். இப்படத்தில் தமிழில் டப்பிங் பேச கூட முயற்சி எடுத்தாராம். ஆனால், அவரது குரல் எதிர்பார்த்தபடி இனிமையாக இல்லை என்று கூறி, வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து பேசி விட்டார்களாம். இருப்பினும், "அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்களில், எனக்கு நானே டப்பிங் பேச, என் குரலை தயார்படுத்துவேன் என்கிறார், மனிஷா.

No comments:

 
FreeWebSubmission.com