பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார் சுபிக்ஷா. ஆந்திரத்து பொண்ணான சுபிக்ஷாவுக்கு இதுதான் முதல் படம். இதுபற்றி அவர் கூறியதாவது: அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு ஹீரோயின் தேடிக்கிட்டிருந்தப்போ நானே நேரில் போய் வாய்ப்பு கேட்டேன். என் தைரியத்தை பார்த்து வாய்ப்பு கொடுத்தார். முதல் படத்துலேயே மோதிரக் கையால் குட்டுப்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாரதிராஜா சார் சரியா நடிக்கலேன்னா அடிப்பார்னு பயமுறுத்தினாங்க. ஆனால் நான் எல்லா சீனையும் ஒரே டேக்கில் நடித்து அடிவாங்காமல் தப்பித்தேன். ஆனால் திட்டு வாங்கியிருக்கேன். என்றார்.
Friday, January 18, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment