"செம்பருத்தியில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு திரையுலகை, ஒரு கலக்கு கலக்கியவர், ரோஜா. சினிமாவை தொடர்ந்து, அரசியலிலும், தன் காலடியை அழுத்தமாக பதித்துள்ளவர். ஆந்திராவில் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாகி விட்டார். ஆனாலும், சினிமாவில் நடிப்பதை, அவர் விட்டுவிடவில்லை. தமிழ், தெலுங்கில் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர், "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில், கதாநாயகி கார்த்திகாவின் அம்மாவாக கமிட்டாகி, ஏதோ காரணங்களால், பின் அப்படத்தில் நடிக்கவில்லை. இதையடுத்து ரோஜா, அம்மா வேடத்தில் நடித்துள்ள "வில்லாதி என்ற படம், தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில், ரோஜாவுக்கு அம்மா வேடம் என்றாலும் கதைப்படி அதிரடி வில்லியாக, அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் ரோஜா.
Wednesday, January 16, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment