சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து வருகிறார் ஓவியா. இந்தப் படம் தனக்கு பெரிய திருப்பம் தரும் என்று நம்பும் ஒவியா தனியா போட்டோ ஷூட் நடத்தி தன் அழகை பல விதங்களில் படம்பிடித்து தயாரிப்பு அலுவலகங்களுக்கும், இயக்குனர்களுக்கும் மெயில் பண்ணியிருக்கிறார். சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் படப்பிடிப்பின் போது உடன் நடித்த தீபாஷாவுடன் சண்டை போட்டார். இதானல் இருவரும் பேசிக் கொள்ளாமலே இருந்தார்கள். ஆனால் இப்போது இருவரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டார்கள். "நடிகையாக இருந்தாலும் நாங்களும் மனுஷங்கதானே எங்களுக்கு கோபம் வராதா. எனக்கு தீபாவுக்கும் சில மனவருத்தம் இருந்துச்சு. ஆனா அதெல்லாம் இப்போ இல்லை. நானும் அவளும் திக் பிரண்டாயிட்டோம். எங்க இரண்டு பேருக்குமே இந்தப் படம் முக்கியமான படம். அதனால படத்தோட புரமோஷனுக்கு சேர்ந்தே போறோம்" என்கிறார் ஓவியா.
Wednesday, January 16, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment