கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது, தனது
ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் கூட்டத்துடன் வருகை தந்தார் பவர்ஸ்டார்
என்கிற டாக்டர் சீனிவாசன். அதைப்பார்த்து, அந்த மேடையில் பேசிய
தயாரிப்பாளரும், இயக்குனருமான கேயர், சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் எந்த
விழாக்களுக்கும் வருவதில்லை. அந்த வகையில் அவர் இல்லாத குறையை
பவர்ஸ்டார்தான் தீர்த்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்ல, தியேட்டரே
அதிரும் அளவுக்கு கைதட்டல் எழுந்தது.
அதையடுத்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் 50வது நாள் விழாவில் பார்த்திபன் பேசும்போது, சுமாரான படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டார் வேண்டும் என்று பேசினார். ஆனால் அதையடுத்து பேசிய கேயார், இனி வருங்காலங்களில் சுமாரான படம் சூப்பர் ஹிட்டாக வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டார் தேவையில்லை, பவர் ஸ்டாரே போதும் என்று பேசினார். அந்த விழாவுக்கு பவர் ஸ்டார் பட்டாளம் வரவில்லை என்றபோதும், கேயாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. ஆனால், எதற்காக இப்படி மேடைக்கு மேடை பவர் ஸ்டார் புராணத்தை கேயார் பாடிக்கொண்டு திரிகிறார் என்பது புரியாமல், சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments:
Post a Comment