"முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும், விஸ்வரூபம் படத்தை, தடை
செய்யவேண்டும் என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, அடுத்த சர்ச்சையில், விஸ்வரூபம் படம் சிக்கியுள்ளது.
கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் விரைவில் திரையரங்குகளில், வெளியாகிறது. டி.டி.எச்., சேவையில், பிப். 2ம் தேதி, வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, "விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை வெளியிடுவதற்கு முன், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட வேண்டும். விமர்சனத்துக்குரிய காட்சிகள் இருந்தால், அவற்றை நீக்கிவிட்டு, படத்தை வெளியிட வேண்டும் என, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் கமல், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார். படத்தை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படத்தை தடை செய்யவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கை: முஸ்லிம்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்தும், காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது வேதனையளிக்கிறது. படம் திரைக்கு வந்தால், முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுவதோடு, சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, விஸ்வரூபம் படத்தை, அரசு தடை செய்யவேண்டும். இவ்வாறு, ஜவஹர் அலி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment