நான் கடவுள் படத்துக்குப்பிறகு ஆர்யாவைப்பற்றிய காதல் கிசுகிசுக்களும் வெளியாகத் தொடங்கின. காரணம், அதற்கு முன்பெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருநத அவர், பின்னர், ஸ்பாட்டில் நடிகைகளை கலாய்ப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். சினிமா விழாக்களுக்கு வந்தால்கூட நடிகைகளிடம் போய் அமர்ந்து கொண்டு அவர்களை சீண்டிக்கொண்டேயிருப்பார். தனக்கு எதிரே மீடியாக்கள் இருப்பதைப்பற்றிகூட கவலைப்பட மாட்டார். என் சுபாவம் இப்படித்தான். யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பது போல் ஜாலிப்பேர்வழியாக தன்னை காட்டிக்கொண்டார் ஆர்யா.
ஆனால் அதுவே அவருக்கு வினையாகி விட்டது. பிரபுதேவாவை பிரிந்த நயன்தாராவுக்கு தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்தார். ஏற்கனவே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோதே அவர்களைப்பற்றி கிசுகிசு பரப்பியவர்களுக்கு இது வெறுவாய்க்கு அவல் கிடைத்த கதையாகி விட்டது.அதனால் இஷ்டத்துக்கு அவர்களைப்பற்றி மெல்லத் தொடங்கினார்கள். ஆனால் இப்போதோ, ஆர்யாவின் கலாய்ப்புக்கு ஆளாகும் அவரது பாசறை நடிகைகளிடம் மற்ற நடிகர்கள் நட்பு வைத்துக்கொள்வதையே தவிர்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் தங்களது சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று உஷாராகி விட்ட ஆர்யாவின் அபிமானத்திற்குரிய நடிகைகள் சமீபகாலமாக அவரை விட்டு விலகி விட்டனர். இதனால் எப்போதும அம்மணிகளுடன் ஜாலியாக பேசிப்பழகி பொழுதை கழித்து வந்த ஆர்யா, இப்போது தன்னைக்கண்டாலே நடிகைகள் தலைதெறிக்க ஓடுவதைக்கண்டு வேதனையில் துடிக்கிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன என்று புலம்பி வருகிறார்.

No comments:
Post a Comment