மலையூர் மம்பட்டியான், வாட்டாக்குடி இரணியன், கும்பக்கரை தங்கையா போன்று கிராமத்து தாதா கம் ஹீரோவாக இருந்தர் அத்திமலை முத்துப்பாண்டி, திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்தவராம். இப்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக தயாரித்து வருகிறார்கள். படத்தின் பெயரும் அத்திமலை முத்துப்பாண்டிதான். சாரதி ஆறுமுகம் என்பவர் அத்திமலை முத்துப்பாண்டியாக நடிக்கிறார். சொப்னா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடி. தஞ்சை ரகுபதி என்பவர் இயக்குகிறார்.
அவர் கூறியதாவது: 1980களில் வாழ்ந்தவர் முத்துப்பாண்டி. அத்திமலை காட்டுக்கே ராஜா மாதிரி அவர். இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுத்தவர். வீரத்தால் வளர்ந்தவர். துரோகத்தால் வீழ்ந்தவர். அவரது வாழ்க்கையே அவர் காலத்தில் இருந்த சினிமா ஸ்டைலிலேயே படமாக எடுக்குகிறோம். அவர் வாழ்ந்த பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். என்றார்.

No comments:
Post a Comment