Wednesday, January 16, 2013

நான் ஹீரோ இல்லை: தம்பி ராமையா!

ஊ என்ற படத்தில் தம்பி ராமையா ஹீரோவாக நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எப்போதுமே நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். ஊ படத்தின் கதையை சொன்னார்கள். நான்கு இளைஞர்களை வைத்து ஒரு காரியத்தை செய்கிற குரு மாதிரி என்னோட கேரக்டர். அந்த நான்கு இளைஞர்களை வேண்டுமானால் ஹீரோ என்று சொல்லலாம். நான் ஹீரோவா நடிக்க வில்லை. முக்கிய கேரக்டர் என்று சொல்லலாம். படத்தின் விளம்பரத்தில் என்னுடைய படமும், பெயரும் முக்கியப்படுத்தப்படுவதால் அப்படி தோன்றலாம். ஹீரோவாக நடிக்கும் வயதை தாண்டிவிட்டேன். அதோடு ஹீரோக்களுக்கென்று சில தகுதிகள் இருக்கிறது. அது என்னிடம் இல்லை என்றார்.
காமெடியன்கள் ஹீரோவாக நடித்தால் அதன் பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்ற ஒரு செண்டிமென்ட் சினிமாவில் உண்டு. அதுதான் தம்பி ராமையாவின் பயத்திற்கு காரணம்.

No comments:

 
FreeWebSubmission.com