Wednesday, January 16, 2013

திருமதி தமிழ் பிலிம் செலவு 84 லட்சம்!

தேவயானி சொந்தமாக தயாரித்து வரும் படம் திருமதி தமிழ். அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி அவருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். தேவயானிக்கு இரட்டை வேடம், ராஜகுமாரனுக்கு தேவயானி, கீர்த்தி சாவ்லா என இரண்டு ஜோடி. சுமார் 3 வருடங்களுக்கு மேலாக படத்தை தயாரித்து வருகிறார்கள். சின்னத்திரையில் நடித்த பணத்தை எல்லாம் தேவயானி இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறார். இதுவரை படத்திற்கு ஆகியிருக்கும் செலவு 6 கோடி என்கிறார்கள். "எல்லோரும் டிஜிட்டலில் படம் எடுக்கும்போது, நான் பிலிமில் படம் எடுதிதிருக்கிறேன். ஒரு லட்சத்து 40 ஆயிரம் அடி பிலிமில் படத்தை எடுத்திருக்கிறேன்" என்று ராஜகுமாரனே சொல்லியிருக்கிறார். 400 அடி கொண்ட ஒரு கேன் பிலிமின் விலை 24 ஆயிரம் ரூபாய். அப்படியென்றால் ராஜகுமாரன் கணக்குப்படி இதுவரை பிலிமுக்கு மட்டும் 84 லட்சம் செலவு செய்திருக்கிறார். சராசரியாக ஒரு படத்தின் நீளம் சுமார் 15 ஆயிரம் அடி. திட்டமிட்டு படம் எடுத்தால் 50 ஆயிரம் அடிக்குள் படத்தை முடிக்கலாம். ஆனால் ராஜகுமாரன் எடுத்திருப்பது ஒரு லட்சத்து 40 ஆயிரம் அடி. இப்போது படம் முடிந்து விட்ட நிலையில் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால் சொந்தமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். போட்ட பணமாவது திரும்பி வர வேண்டும் என்று தேவாயானி கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 

No comments:

 
FreeWebSubmission.com