Thursday, December 27, 2012

கண்ணதாசன் பாடல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு!

கண்ணதாசன் எழுதிய பாடல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புதிய படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். டைரக்டர் சேதுமணி அனந்தா இயக்கி வரும் புதிய படம் மனிதனாக இரு. இப்படத்தில்தான் கண்ணதாசனின் உலகம் பிறந்தது எனக்காக... என்ற பாடல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.

இதுபற்றி சேதுமணி அனந்தா கூறுகையில், நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவர் அடிக்கடி கூறும் மனிதனாக இரு என்ற வார்த்தையையே தலைப்பாக வைத்து படம் இயக்குகிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, தேசப்பற்று இவற்றை வலியுறுத்தும் படம். எம்.எஸ்.விஸ்வநாதன் 19 பாடல்கள் போட்டுள்ளார். அதில் 10 பாடல்கள் இதில் இடம்பெறுகிறது. ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உலகம் பிறந்தது எனக்காக பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறோம், என்றார்.

No comments:

 
FreeWebSubmission.com