Thursday, December 27, 2012

விஸ்வரூபம் பட்ஜெட் 95 கோடி ரூபாயா?

ரிலீசாவதற்கு முன்பே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, "விஸ்வரூபம் படத்தை பற்றிய, லேட்டஸ்ட் செய்தி இது. கமல்ஹாசன், இதுவரை நடித்துள்ள  படங்களிலேயே, விஸ்வரூபம் தான், அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இந்த படத்தின் பட்ஜெட், 95 கோடி ரூபாய் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாலும், ஒலி,ஒளியில், பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாலும், இந்த அளவுக்கு, பட்ஜெட் எகிறியுள்ளதாம். இதனால், 150 கோடி ரூபாய் அளவுக்காவது, வசூல் வந்தால், நன்றாக இருக்கும் என, நினைக்கிறதாம், படக் குழு. தமிழ்,தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில் படம், வெளியாவதால், எதிர்பார்க்கும் வசூலை, எட்டி விடலாம் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

No comments:

 
FreeWebSubmission.com