Tuesday, December 11, 2012

நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!

நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமே ஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகை அமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான் அறிமுகப்படுத்தினார். அவர் தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனா என்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள். கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

No comments:

 
FreeWebSubmission.com