Tuesday, December 11, 2012

கை நீது சந்திராவுக்கு கொரிய அரசு கவுரவம்!

நடிகை நீது சந்திராவுக்கு தற்காப்பு கலைக்கான கருப்பு பெல்ட்டை கொரிய அரசு வழங்கவிருக்கிறது. தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. இப்போது, அமீர் இயக்கும் ஆதிபகவன் படத்தில் நடித்து வருகிறார். கொரிய தற்காப்பு கலையான டேக்வாண்டோவை கற்றுள்ள நீது சந்திரா, இதில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை ஏற்கனவே வாங்கியுள்ளார். இப்போது நான்காவது ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இந்த பெருமைக்குரிய பட்டத்தை வாங்கிய ஒரே இந்திய பெண் நீது சந்திராதான். இதற்காக வரும் 13ம்தேதி டில்லியில் விழா நடக்கிறது. இவ்விழாவில் கொரிய அரசு நான்காவது ப்ளாக் பெல்ட்டை நீதுவுக்கு வழங்கி கவுரவிக்க உள்ளது.

இதுபற்றி நீது சந்திரா கூறுகையில், என் குடும்பத்தில் நான் மட்டுமே விளையாட்டுடன் கல்வியையும் சேர்த்துக் கற்றேன். மற்றவர்களை போல நானும் இன்ஜினீயர், டாக்டர் என்று படித்திருந்தால் இதுபோன்ற விருதுகளை இழக்க வேண்டி இருந்திருக்கும். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தற்காப்பு கலையில் சாதிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். மாவட்ட, மாநில அளவு போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். இதற்கு என் அம்மாதான் காரணம். அவர் என்னை உற்சாகப்படுத்தி இருக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை, என்றார்.

No comments:

 
FreeWebSubmission.com