சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் துவங்கியது. இந்த விழாவில் 15 நாடுகளின், 32 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்பட அகடமி மற்றும் செவன்த் சேனல் கம்யூனிக்கேஷன் இணைந்து நடத்தும் இவ்விழா, சென்னை தி.நகரில் உள்ள, தேவி ஸ்ரீ தேவி தியேட்டரில், நேற்று துவங்கியது. எகிப்து நாட்டில் தயாரிக்கப்பட்ட, "அஸ்மா என்ற படம், முதல் படமாக திரையிடப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், எகிப்து, லிதுவேனியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், சிலே உட்பட, 15 நாடுகளின், 15 திரைப் படங்கள், 16 குறும் படங்கள் மற்றும் ஒரு ஆவணம் படம் என, 32 படங்கள் திரையிடப்படுகின்றன. நவ., 2ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், சிறந்த படம், குறும் படம், சிறந்த இயக்குனருக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
Thursday, November 1, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment