Thursday, November 1, 2012

ஷாரூக் உடன் மோதும் அஜய் தேவ்கன்!

பாலிவுட்டில் சல்மான் கானுக்கும், ஷாரூக் கானுக்கும்  நடக்கும் பகிரங்கமான மோதல், அனைவருக்கும் தெரிந்ததே. இவர்களில் யாராவது ஒருவரின் படம் வெளியானால், அந்த தேதியில், வேறு படங்கள் எதுவும் வெளியாகாது. இந்த விவகாரத்தில், தற்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஷாரூக் நடித்த, "ஜாப் டக் ஹை ஜான் என்ற படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அதே நாளில், பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான, அஜய் தேவ்கன் நடித்த, "சன்ஸ் ஆப் சர்தார் என்ற படமும் திரைக்கு வருகிறது. அஜய்க்கு, சல்மான் கொடுத்த தைரியம் காரணமாகவே, ஷாரூக் கானுக்கு போட்டியாக, இந்த படம் களமிறக்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில், அஜயுடன், சோனாக்ஷி சின்கா, சஞ்சய் தத், ஜூகி சாவ்லா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அஸ்வனி திர் இயக்கியுள்ளார். ஷாரூக்கானுடனான மோதலில், அஜய் தேவ்கனுக்கு வெற்றி கிடைக்குமா என்பது, தீபாவளி அன்று தெரிந்து விடும்.

No comments:

 
FreeWebSubmission.com