Friday, November 9, 2012

படப்பிடிப்பில் ஹன்சிகா-அஞ்சலி மோதலா: இயக்குனர் விளக்கம்!

யுடிவி தயாரிக்கும் சேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகாவும், அஞ்சலியும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் தொடங்கி மேக்-அப் சாதனங்கள் வரை இருவருக்கும் போட்டியும், அதன் காரணமாக மனஸ்தாபமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் கண்ணன் அளித்த விளக்கம்.
படத்திற்கு இருவரையும் ஒப்பந்தம் செய்யும்போது யாருக்கு என்ன கேரக்டர் என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டுதான் படத்தையே தொடங்கினோம். இதுவரை நடந்த படப்பிடிப்பில் ஹன்சிகா தனியாகவும், அஞ்சலி தனியாகவும் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை இனிமேல்தான் எடுக்க இருக்கிறோம். அதற்குள் இப்படிப்பட்ட செய்திகளை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாகவும். அஞ்சலியை முத்தக் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததாகவும் புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்தி டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரான வசனங்கள் இருந்தது. ஆனால் நாங்கள் அதனை தவிர்த்திருக்கிறோம். ஒரே ஒரு முத்தக் காட்சி படத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் அஞ்சலி நடிக்க தயங்கினார். அவரது அம்மா என் மகள் அப்படி நடிக்க மாட்டாள் என்றார். ஆனால் கதையின் முக்கியத்துவத்துக்கு அந்த காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன பிறகு ஒத்துக் கொண்டு நடித்தார்.
சேட்டை படத்துக்கிட்டேயே சேட்டைய காட்டுறாய்ங்களே....

No comments:

 
FreeWebSubmission.com