Friday, November 9, 2012

தனிப்பட்ட யாரையும் கிண்டல் செய்து படம் இயக்கவில்லை: மணிவண்ணன்

தான்  இயக்கிய அமைதிப்படை படத்தை நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் மணிவண்ணன். இந்தப் படத்தில் வாரிசு அரசியலை மையமாக வைத்து கருணாநிதி குடும்பத்தை கிண்டல் செய்து நிறைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதனை மணிவண்ணன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
அமைதிப்படை படத்தில் அள்ளக்கை அமாவாசை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆனான். அந்த எம்.எல்.ஏவின் திகிடுதத்தங்களையும், அவர் செய்யும் காமெடி அரசியலையும் மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. நாகராஜசோழனை இன்றைய அரசியல்வாதியோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாமே தவிர யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கிண்டல் செய்யவில்லை. ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்குறோம்.  அமைதிப்படையில வந்த மகன்  கேரக்டர் இதில் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு லாரி டிரைவர் அவரை திருத்துறதா மாற்றியிருக்கேன். அவர் எப்படி திருந்துகிறார். என்ன ஆகிறார் என்பதை காமெடியாக சொல்கிறேன். காமெடி பாலிட்டிக்ஸ் படம்னு சொல்லலாம்.
படத்துல அல்வா உண்டா மணிசார்...

No comments:

 
FreeWebSubmission.com